search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரியாக ஸ்டீபன் பார்க்லே தேர்வு
    X

    பிரிட்டன் நாட்டின் பிரெக்சிட் மந்திரியாக ஸ்டீபன் பார்க்லே தேர்வு

    பிரிட்டன் நாட்டு மந்திரிசபையில் கருத்து வேற்றுமையால் பிரெக்சிட் மந்திரி டோம்னிக் ராக் ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு ஸ்டீபன் பார்க்லே-வை பிரதமர் தெரசா மே தேர்வு செய்துள்ளார். #StephenBarclay #Brexit #Brexitsecretary #TheresaMay
    லண்டன்:

    ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகும் விவகாரத்தில் பிரதமர் தெரசா மே சமர்ப்பித்த உடன்படிக்கை தொடர்பாக ஏற்பட்ட அதிருப்தியால் அந்நாட்டில் இரு மூத்த மந்திரிகள் உள்பட 4 மந்திரிகள் ஒரேநாளில் ராஜினாமா செய்தனர்.

    இவர்களில் பிரெக்சிட் துறை மந்திரி டோம்னிக் ராக் ராஜினாமா செய்ததால் தெரசா மே கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஒருதரப்பு எம்.பி.க்கள் காய்நகர்த்தி வருகின்றனர்.


    இந்நிலையில்,  பிரெக்சிட் மந்திரியாக ஸ்டீபன் பார்க்லே-வை பிரதமர் தெரசா மே இன்று தேர்வு செய்துள்ளார். வடகிழக்கு கேம்பிரிட்ஜ்ஷைர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான ஸ்டீபன் பார்க்லே தற்போது சுகாதரத்துறை மந்திரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #StephenBarclay  #Brexit  #Brexitsecretary #TheresaMay 
    Next Story
    ×