search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலிபோர்னியா - காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு
    X

    கலிபோர்னியா - காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. #CaliforniaWildfires
    வாஷிங்டன்: 

    அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. மொத்தம் 16 இடங்களில் காட்டுத் தீ பிடித்துள்ளது. இதில் இரண்டு இடங்களில் மட்டும் காற்றின் வேகம் காரணமாக தீ கொளுந்துவிட்டு எரிவதுடன், பல ஏக்கர் நிலப்பரப்பிற்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீயில் கருகின. 

    தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருவதால் எங்கும் தீப்பிழம்பாக காட்சி அளிக்கிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மூலம் தீயின் உக்கிரத்தை தணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



    இதற்கிடையே, காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
    தீப்பிடித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் உயரலாம் என மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. #CaliforniaWildfires
    Next Story
    ×