search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனாவில் ரஷியா பிரதமருடன் இம்ரான் கான் சந்திப்பு
    X

    சீனாவில் ரஷியா பிரதமருடன் இம்ரான் கான் சந்திப்பு

    அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று ரஷியா நாட்டின் பிரதமர் டிமிட்ரி மெட்வேடேவ்-ஐ சந்தித்து பேசினார். #ImranKhan #Medvedev
    பீஜிங்:

    பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    பாகிஸ்தானின் நிதி நிலவரங்களை ஆய்வு செய்ய சர்வதேச நிதியத்தின் உயரதிகாரிகள் குழு நவம்பர் 7-ம் தேதி இஸ்லாமாபாத் வருகிறது. இதுதவிர, அரசு தரப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக இம்ரான் கான் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றார். சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு நிதிச்சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு கடனுதவியாக 600 கோடி டாலர்களை அளிக்க சவுதி அரசு முன்வந்துள்ளது.

    இதேபோல் நிதி திரட்டும் நோக்கத்துடன் 4 நாள் பயணமாக சீனாவுக்கு சென்ற இம்ரான் கான், சீன பிரதமர் லீ கெகியாங்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு சீனா 6 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.



    தற்போது சீனாவின் ஷங்காய் நகரில் சர்வதேச ஏற்றுமதி - இறக்குமதி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இதை காண்பதற்காக சீனா வந்துள்ள ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று சந்தித்துப் பேசினார். பாகிஸ்தானுக்கு வருமாறு டிமிட்ரி மெட்வெடேவுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்தார். #ImranKhan  #Medvedev
    Next Story
    ×