search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை அமல்- பொதுமக்கள் போராட்டம்
    X

    ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை அமல்- பொதுமக்கள் போராட்டம்

    ஈரான் மீதான பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். #IranSanctions #USSanctions
    தெக்ரான்:

    ஈரானுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூற கடந்த மே மாதம் அமெரிக்கா விலகியது.

    மேலும் ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். எப்போதும் இல்லாத வகையில் பொருளாதார தடை இருக்கும் என்றும் எச்சரித்தார். ஈரான் மட்டுமின்றி அதனுடன் வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் நாடுகளுக்கும் இந்த தடை பாயும் என்றும் தெரிவித்தார்.

    அந்த பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவில் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான பிரசாரத்துக்கு புறப்படும் முன்பு அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஈரான் மீதான பொருளாதார தடை கடுமையாக இருக்கும். அது எப்போதும் இல்லாத வகையில் மிக பலம் வாய்ந்ததாக இருக்கும். என்ன நடக்கும் என்பதை பார்க்க தானே போகிறோம் என்றார்.

    இதன் மூலம் எண்ணை ஏற்றுமதி, வங்கி சேவைகள், கப்பல் நிறுவனங்கள், விமான சேவை உள்ளிட்ட 700 வகையான பாதிப்புகள் ஏற்படும். மேலும் அமெரிக்காவின் 100 மிகப்பெரிய கம்பெனிகள் ஈரானில் இருந்து வெளியேறும். அதன் காரணமாக ஈரான் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்படும். எனவே அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.



    தெக்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் கூடி அமெரிக்காவுக்கு எதிரான கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதே போன்று மேலும் பல நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது. ஆனால் ஈரான் ராணுவத்தின் போர் விமானங்கள் வானத்தில் பறந்து பயிற்சிகள் மேற்கொண்டன. நாட்டின் பாதுகாப்பு பணியில் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதை காட்டுவதற்கு இவை நடத்தப்பட்டன.

    ஆனால் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தடையை ஏற்க மறுத்த இவர்கள் ஈரானுடனான வர்த்தகத்தை டாலர் இன்றி வேறு விதமான பணபரிமாற்றத்துடன் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர். #IranSanctions #USSanctions
    Next Story
    ×