search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லைப்பகுதியில் ராணுவத்தை குவித்து அரசியல் ஸ்டன்ட் அடிக்கும் டிரம்ப் - ஒபாமா காட்டம்
    X

    எல்லைப்பகுதியில் ராணுவத்தை குவித்து அரசியல் ஸ்டன்ட் அடிக்கும் டிரம்ப் - ஒபாமா காட்டம்

    குடியேறிகளை தடுப்பதாக கூறி எல்லைப்பகுதியில் 5 ஆயிரம் ராணுவத்தினரை குவித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் 'அரசியல் ஸ்டன்ட்’ அடிப்பதாக முன்னாள் அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார். #Obama #Mexicanborder #Trump #Trumppoliticalstunt #politicalstunt
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக பொறுப்பு வகிக்கும் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் குடியுரிமை விவகாரங்களில் மிகவும் கறாராக உள்ளார். சட்டவிரோதமான குடியேற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

    எல் சவடோர், ஹோன்டுராஸ், குவட்டெமலா ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து சுமார் 7 ஆயிரம் குடியேறிகள் அமெரிக்காவுக்குள் குடியேறுவதற்காக மெக்சிகோ நாட்டின் வழியாக வந்து கொண்டிருப்பதாக தெரிவித்த டிரம்ப், அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் அமெரிக்கா - மெக்சிகோ எல்லப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ளார்.

    இந்நிலையில், டிரம்ப்பின் இந்த நடவடிக்கையை  'அரசியல் ஸ்டன்ட்’ என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.

    ஜார்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஒபாமா, ‘அமெரிக்காவை நோக்கி அடைக்கலத்துக்காக வரும் ஏழை அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டதாக தற்போது அரசு கூறுகிறது.

    கைகளில் குழந்தைகளுடன் பலநூறு மைல்கள் நடந்துவரும் அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக நமது வீரம்மிக்க ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளனர். தங்கள் குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய நேரத்தில் நமது ராணுவத்தை சேர்ந்த வீரர்-வீராங்கணைகள் இவர்களின் அரசியல் ஸ்டன்ட்டுக்காக எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவா நாட்டுப்பற்று? இது நாட்டுப்பற்றில்லை. வெறும் அரசியல் ஸ்டன்ட் மட்டும்தான்.

    தேர்தல்கள் வரும் காலத்தில் இதுபோல் பேசுவதும், தேர்தலுக்கு பின்னர் இதை எல்லாம் மறந்து விடுவதும் இவர்களுக்கு சகஜமாகி விட்டது என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார். #Obama #Mexicanborder #Trump #Trumppoliticalstunt #politicalstunt
    Next Story
    ×