search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன அதிபருடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப் - வர்த்தக விவகாரம் குறித்து ஆலோசனை
    X

    சீன அதிபருடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப் - வர்த்தக விவகாரம் குறித்து ஆலோசனை

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வர்த்தக விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். #TradeWarUSChinaTrade #Trump #XiJinping
    வாஷிங்டன்:

    உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.



    இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், “சீன அதிபருடன் நீண்ட நேரம் நடந்த உரையாடல் சிறப்பானதாக அமைந்தது. வர்த்தக முக்கியத்துவம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் பேசினோம். ஜி20 மாநாட்டின்போது நடைபெற உள்ள சந்திப்பு தொடர்பாக பேசினோம். வடகொரியா விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

    அர்ஜென்டினாவில் ஜி20 மாநாட்டின் இடையே நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய நாட்களில் டிரம்ப், ஜி ஜின்பிங் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #TradeWarUSChinaTrade #Trump #XiJinping
    Next Story
    ×