search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - ஜப்பான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - பிரதமர் மோடி கையொப்பமிட்டார்
    X

    இந்தியா - ஜப்பான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - பிரதமர் மோடி கையொப்பமிட்டார்

    இந்தியா - ஜப்பான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருநாட்டு பிரதமர்களும் இன்று கையொப்பமிட்டனர். #ModiShinzoAbe #IndiaJapanMoUs
    டோக்கியோ:

    இருநாள் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே முப்படைகளின் அணிவகுப்புடன் கூடிய அரசு மரியாதையுடன் இன்று சிறப்பான வரவேற்பு அளித்தார்.

    பின்னர் 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற இருநாட்டு தலைவர்களும் ஆசிய-பசிபிக் நாடுகளில் நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தினர்.

    இந்தியா-ஜப்பான் நட்புறவை பலப்படுத்தும் வகையிலும் உலக நாடுகளின் அமைதி மற்றும் நிரந்தரத்தன்மையை நிலைநாட்டும் வகையிலும் இனி இந்தியா-ஜப்பான் நாடுகளுன் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகள் ஆண்டுதோறும் சந்தித்துப் பேசுவார்கள் என இன்றைய ஆலோசனையின்போது தீர்மானிக்கப்பட்டது.

    சைபர்தளம், மின்னணுவியல், சுகாதாரம், ராணுவம், கடல் மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

    இந்தியா-ஜப்பான் நட்புறவின் அடையாளமான மும்பை-அகமதாபாத் இடையிலான அதிவிரைவு ரெயில் திட்டப் பணிகளை விரைவுப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் பணிகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

    இருநாடுகளுக்கு இடையிலான கடற்படை தொடர்பான கூட்டுறவை அதிகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மோடியும், ஷின்ஸோ அபேவும் கையொப்பமிட்டனர்.

    இந்தியா-ஜப்பான் இடையிலான பணப்பரிமாற்றத்துக்கு வசதியாக 7500 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பணத்தை இருநாடுகளும் பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தமும் கையொப்பமானது.

    இந்த சந்திப்புக்கு பின்னர் ஷின்ஸோ அபேவுடன் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த பிரதமர் மோடி, இந்தியாவில் 250 கோடி அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்ய ஜப்பான் தொழிலதிபர்கள் தற்போது முன்வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

    பின்னர், தனது ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி (இந்திய நேரப்படி) இன்று மாலை 6 மணியளவில் தனிவிமானத்தில் டோக்கியோவில் இருந்து டெல்லி புறப்பட்டார். #ModiShinzoAbe #IndiaJapanMoUs
    Next Story
    ×