search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜமால் கஷோகி கொலையாளிகள் மீது சவுதி அரேபியாவில்தான் விசாரணை - மந்திரி திட்டவட்டம்
    X

    ஜமால் கஷோகி கொலையாளிகள் மீது சவுதி அரேபியாவில்தான் விசாரணை - மந்திரி திட்டவட்டம்

    பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சவுதி அரேபியாவில்தான் விசாரணை - நடைபெறும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். #Khashoggikillers #JamalKashoggi
    மனாமா:

    துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பான குற்றவாளிகள் 18 பேரை சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட வேண்டும்.

    அவர்கள்மீது எங்கள் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, தண்டனை விதிக்கப்பட வேண்டும் என துருக்கி அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.



    இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக சவுதி அரேபியாவை சேர்ந்த 18 பேரையும் நாங்கள் கைது செய்து காவலில் அடைத்துள்ளோம்’ இதுதொடர்பான விசாரணையும் சவுதி அரேபியா நாட்டில்தான் நடைபெறும் என சவுதி வெளியுறவுத்துறை மந்திரி அடெல் அல் ஜுபைர் தெரிவித்துள்ளார். #Khashoggikillers #JamalKashoggi
    Next Story
    ×