search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜமால் கசோக்கி படுகொலை - விரிவான விசாரணை கோரும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன்
    X

    ஜமால் கசோக்கி படுகொலை - விரிவான விசாரணை கோரும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன்

    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. #JamalKhashoggi
    லண்டன்:

    சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

    அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.



    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணை தூதரகம் சென்று விசாரித்தனர்.

    இதற்கிடையே, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா உறுதி செய்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. #JamalKhashoggi
    Next Story
    ×