search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெல்ஜியம் சென்றடைந்தார்
    X

    ஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெல்ஜியம் சென்றடைந்தார்

    12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெல்ஜியம் சென்றடைந்தார். #VenkaiahNaidu #ASEM2018
    பிரஸ்ஸல்ஸ்:

    12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கான மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு இன்று தொடங்குகிறது. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துழைப்பு நல்க ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு இது மிகவும் முக்கியமான கூட்டமாக அமைந்துள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா சார்பில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று டில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சை சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    பெல்ஜியம் சென்றுள்ள வெங்கையா நாயுடு, அந்நாட்டு அரசர் பிலிப், பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

    மேலும்,, அந்நாட்டில் உள்ள ஜெயின் கலாச்சார மையத்தில் பெல்ஜியம்வாழ் இந்திய மக்களிடம் உரையாற்ற உள்ளார். அதன் பின்னர், பிரஸ்ஸல்ஸின் ஆண்ட்வர்ப் பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #VenkaiahNaidu #ASEM2018
    Next Story
    ×