search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க கோர்ட்டில் டிரம்ப் மீது ஆபாச நடிகை தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி
    X

    அமெரிக்க கோர்ட்டில் டிரம்ப் மீது ஆபாச நடிகை தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி

    அமெரிக்க கோர்ட்டில் டிரம்ப் மீது ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து நிதிபதி தீர்ப்பு வழங்கினார். #DonaldTrump #StormyDaniels
    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்தவர் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். ஸ்டீபனி கிளிப்போர்டு என்ற உண்மையான பெயரைக் கொண்ட இவர், “அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் என்னுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டார்; இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது நான் வாய் திறக்கக்கூடாது என்பதற்காக எனக்கு டிரம்பின் வக்கீல் 1 லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.96 லட்சம்) பணம் தந்தார் ” என பரபரப்பு புகார் கூறினார்.



    தேர்தல் நடத்தை விதிகளை மீறி இந்தப் பணத்தை ஸ்டார்மி டேனியல்சுக்கு தான் கொடுத்தது உண்மைதான் என டிரம்பின் வக்கீல் மைக்கேல் கோஹன் கோர்ட்டில் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் ஸ்டார்மி டேனியல்ஸ் கட்டவிழ்த்து விட்டுள்ள கட்டுக்கதை இது என்ற ரீதியில் டிரம்ப், டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

    இது தொடர்பாக டிரம்ப் மீது ஸ்டார்மி டேனியல்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட கோர்ட்டில் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி ஜேம்ஸ் ஆட்டீரோ விசாரித்தார். அப்போது டிரம்ப் தரப்பில் வாதிடுகையில், அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வார்த்தைகள், அமெரிக்க அரசியல் மற்றும் பொதுச்சொற்பொழிவில் தொடர்புடைய வார்த்தைகள்தான் என குறிப்பிட்டார்.

    இதை நீதிபதி ஏற்று, டிரம்ப் மீதான அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் அவர், டிரம்ப் டுவிட்டரில் கூறியுள்ள வார்த்தைகளுக்கு அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் பாதுகாப்பு அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கில் டிரம்ப் தரப்புக்கு ஆன சட்ட செலவுகளை நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். #DonaldTrump #StormyDaniels 
    Next Story
    ×