search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நவம்பர் 3-ம் தேதி சீனா பயணம்
    X

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நவம்பர் 3-ம் தேதி சீனா பயணம்

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் நவம்பர் 3-ம் தேதி முதன்முறையாக சீனா செல்கிறார். #ImranKhan #ImranKhanChinavisit
    இஸ்லாமாபாத்:

    வல்லரசு போட்டியில் முதலிடத்தை பிடிக்க முயன்றுவரும் சீனா இந்தியாவின் எதிரியான பாகிஸ்தான் மீது அளவுகடந்த பாசத்தை பொழிந்து வருகிறது.

    பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வருகிறது.

    தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்வதற்காக  சர்வதேச நிதியத்தின் அதிகாரிகள் அடுத்த மாதம் 7-ம் தேதி பாகிஸ்தானுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான் நவம்பர் 3-ம் தேதி முதன்முறையாக சீனா செல்கிறார். சினா-பாகிஸ்தான் இடையிலான ராணுவம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக இந்த பயணத்தின்போது சீன அதிபர் க்சி கின்பிங் உடன் இம்ரான் கான் முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதி கண்காட்சியை நவம்பர் 5-ம் தேதி இம்ரான் கான் பார்வையிடுவார் என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. #ImranKhan  #ImranKhanChinavisit
    Next Story
    ×