search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில்நுட்ப கோளாறால் ரஷிய விண்கலம் அவசர தரையிரக்கம்  - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 2 விண்வெளி வீரர்கள்
    X

    தொழில்நுட்ப கோளாறால் ரஷிய விண்கலம் அவசர தரையிரக்கம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 2 விண்வெளி வீரர்கள்

    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற ரஷ்ய விண்கலம் அவசரமாக தரையிறக்கபட்டதாக நாசா தெரிவித்து உள்ளது. #NASA
    வாஷிங்டன்:

    அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேசில், இத்தாலி   உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை அமைத்து உள்ளன. பூமியிலிருந்து 418 கி.மீ தூரத்தில் இந்த விண்வெளி  ஆய்வு மையம் அமைந்து உள்ளது. விண்வெளி மையத்தின் கட்டுமான பணிக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் சென்று திரும்புகின்றனர்.

    சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அங்குள்ள மனித வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் தொடர்பான ஆய்வுகள் அங்கு நடந்து வருகிறது.  அமெரிக்காவின் நாசா மட்டுமல்லாமல் உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    சர்வதேச விண்வெளி மையத்திற்கு  இரண்டு விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற  ரஷ்ய ராக்கெட் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா கூறி உள்ளது.



    சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற   ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம்  மத்திய கஜகஸ்தானில் ஷெஷ்காஸ்கானின் நகரத்திற்கு அருகே அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. மீட்புப் படையினர் அந்த இடத்தை அடைந்து உள்ளனர்.  இரண்டு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

    பூஸ்டர்  பிரச்சினை இருந்தது என்று டுவிட் செய்துள்ளது மற்றும் ராக்கெட் பூமி திரும்பும் என்றும் கூறி உள்ளது. #NASA
    Next Story
    ×