search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் மிக உயரிய விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரை
    X

    அமெரிக்காவின் மிக உயரிய விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரை

    அமெரிக்க பாராளுமன்றத்தால் அளிக்கப்படும் மிக உயரிய தங்கப்பதக்கம் விருதுக்கு அகிம்சை கொள்கையை நிலைநாட்டிய மகாத்மா காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #USCongressionalGoldMedal #MahatmaGandhi
    வாஷிங்டன்:

    அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ்சபை மற்றும் பிரதிநிதிகள் சபையின் சார்பில் அந்நாட்டில் சிறப்பான வகையில் சமூகத் தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் அளித்து கவுரவிக்கப்படுகிறது.

    அமெரிக்காவின் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் இந்த தங்கப்பதக்கம் மிகவும் அரிதாக சில வெளிநாட்டவர்களுக்கும் முன்னர் அளிக்கப்பட்டது.

    1997-ம் ஆண்டில் அன்னை தெரசா, 1998-ம் ஆண்டில் நெல்சன் மண்டேலா, 2000-ம் ஆண்டில் போப் இரண்டாம் ஜான் பால், 2006-ம் ஆண்டில் தலாய் லாமா, 2008-ம் ஆண்டில் ஆங் சான் சூகி, 2010-ம் ஆண்டில் முஹம்மத் யூனுஸ், 2014-ம் ஆண்டில் ஷிமோன் பேரெஸ் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், இவ்விருதுக்கு மகாத்மா காந்தியின் பெயரை பரிந்துரைக்க விரும்புவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்திய சுதந்திர விழாவின்போது அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் கரோலின் மலோனே தெரிவித்திருந்தார்.



    அகிம்சை முறையில் மகாத்மா காந்தி நடத்திய சத்தியாகிரகப் போராட்ட இயக்கம் ஒரு நாட்டுக்கும் இந்த உலகத்துக்கும் ஊக்கசக்தியாக அமைந்தது. பிறரது சேவைக்கு நம்மை அர்ப்பணித்து கொள்ள அவரது வாழ்க்கை ஒரு உதாராணப் பாடமாக அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதைதொடர்ந்து, அமைதி மற்றும் அகிம்சைக்காக போராடிய மகாத்மா காந்தியின் பெயரை இந்த விருதுக்கு பரிந்துரை செய்து 23-9-2018 அன்று அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஒரு தீர்மானத்தை கரோலின் மலோனே தாக்கல் செய்துள்ளார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான அமி பேரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கன்னா, பிரமிளா ஜெயபால் மற்றும் துல்சி கபார்ட் உள்ளிட்டோர் இந்த தீர்மானத்தை ஆதரித்து வழிமொழிந்துள்ளனர். #USCongressResolution #USCongressionalGoldMedal #MahatmaGandhi
    Next Story
    ×