search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சுனாமி பலி எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்தது
    X

    இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சுனாமி பலி எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்தது

    இந்தோனேசியா நாட்டின் சிலாவேசி தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்துள்ளது. #Indonesiaquaketsunami #deathtoll1234
    ஜகர்தா:

    இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் கடந்த 27-ம் தேதி 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
     
    இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. இந்த திடீர் சுனாமியை எவ்வித எச்சரிக்கை கருவிகளாலும் மதிப்பிட முடியாமல் போனதாக கூறப்படுகிறது.


    சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த பேரலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமி பேரலையில் சிக்கி இடிந்து விழுந்தன. ஏராளமானோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

    இந்நிலையில், இன்று பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1234 ஆக உயர்ந்ததாக அந்நாட்டின் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.  #Indonesiaquaketsunami #deathtoll1234
    Next Story
    ×