search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூம் ஜாமீனில் விடுதலை
    X

    மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூம் ஜாமீனில் விடுதலை

    மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூமுக்கு மாலத்தீவு கோர்ட் இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பு அளித்தது. #MaumoonAbdulGayoom
    மாலே:

    மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூம். 80 வயதான இவர், 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக இருந்தார்.

    தன்னுடைய சகோதரரும், தற்போதைய அதிபருமான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கடந்த பிப்ரவரி மாதம் அப்துல் கயூம் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, விசாரணை அதிகாரிகளிடம் தனது செல்போனை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை விதித்தது. அவருடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 19 மாத ஜெயில் தண்டனை விதித்து மாலத்தீவு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
     
    இந்நிலையில், மாலத்தீவின் முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூமுக்கு ஜாமீன் அளித்தது. இதேபோல், காசிம் இப்ராகிம் என்பவ்ருக்கும் ஜாமீன் அளித்து மாலத்தீவு கோர்ட் இன்று தீர்ப்பளித்தது.

    கடந்த 23-ம் தேதி அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்ராகிம் முகமது சொலி, சிறை கைதிகளாக உள்ள அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும் விடுவிக்கும்படி அதிபராக உள்ள அப்துல்லா யாமீனை வலியுறுத்தியதை தொடர்ந்து முன்னாள் அதிபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #MaumoonAbdulGayoom
    Next Story
    ×