search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையாளிகளை மகிமைப்படுத்தும் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தையா? - ஐ.நா.வில் சுஷ்மா விளக்கம்
    X

    கொலையாளிகளை மகிமைப்படுத்தும் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தையா? - ஐ.நா.வில் சுஷ்மா விளக்கம்

    ஐ.நா.வில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தடைபட்டதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். #UN #SushmaSwaraj #Pakistan
    வாஷிங்டன்:

    ஐ.நா.வின் 73-வது பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி, பேச்சுவார்த்தையின் மூலமாக பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இந்தியா, பேச்சுவார்த்தைக்கான அழைப்பை நாசப்படுத்தியதாக கூறுவது உண்மைக்கு புரம்பானது என தெரிவித்துள்ளார்.

    இந்தியா பாகிஸ்தான் இடையே பலமுறை பேச்சுவார்த்தைக்கு முடிவு செய்யப்பட்டதாகவும், பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டால் அதற்கு முழு காரணம் பாகிஸ்தான் நடந்துகொள்ளும் முறைதான் எனவும் சுஷ்மா சுவராஜ் கடுமையாக தாக்கியுள்ளார்.

    இந்தியாவில் ஏற்பஅ ஒவ்வொரு அரசும் பாகிஸ்தானுடன் அமைதியை நிலைநாட்ட முயற்சித்து வந்ததாகவும், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் தானே நேரடியாக சென்று இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், 2017 ஜனவரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலை பரிசாக அளித்ததாகவும் சுஷ்மா சுவராஜ் கடுமையாக சாடியுள்ளார்.



    மேலும், இந்த முறை புதிய பிரதமர் இம்ரான் கானின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்ற சிறிது நேரத்தில், பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் பலி என செய்திகள் வெளியாகிறது. இதுபோன்ற பயங்கரவாத செயல்களுக்கு மத்தியில் எவ்வாறு அமைதிப்பேச்சுவார்த்தை நடத்துவது? என இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கேள்வியெழுப்பியுள்ளார்.

    மேலும், பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துவது பாகிஸ்தானின் திறைமைகளில் ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார். #UN #SushmaSwaraj #Pakistan
    Next Story
    ×