search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் எச்-4 விசாவில் வேலை வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது - பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தல்
    X

    அமெரிக்காவில் எச்-4 விசாவில் வேலை வழங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது - பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

    ‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி வேலை பார்க்க அனுமதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்து விடக்கூடாது இரண்டு பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். #H4Visa #H1BVisa
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி வகித்த காலத்தில் ‘எச்-1’ பி விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கும் (ஆண் என்றால் மனைவிக்கும், பெண் என்றால் கணவருக்கும்), அவர்களின் 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கும் ‘எச்-4’ விசா அளித்து, வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார்.

    இந்த திட்டத்தால், ‘எச்-1’ பி விசாவில் அமெரிக்காவில் வேலை பார்க்கிற ஆண்களின் மனைவிமாருக்கும், பெண்களின் கணவர்களுக்கும் அங்கேயே வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிற தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு வரமாக அமைந்தது.



    ஆனால் இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதை கடந்த வாரம் அங்குள்ள கோர்ட்டில் உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்தது. இது தொடர்பாக 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அப்போது கூறப்பட்டது. இது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்காவில் செல்வாக்குமிக்க ஜனநாயகக்கட்சி பெண் எம்.பி.க்களான கமலா ஹாரிஸ், கிர்ஸ்டன்ஸீ கில்லிபிராண்ட் ஆகியோர் உள்நாட்டு பாதுகாப்புத்துறை இயக்குனர் கிறிஸ்டியன் நீல்சனுக்கும், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்.) பிரான்சிஸ் சிஸ்னாவுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.

    அந்தக் கடிதத்தில் அவர்கள் ‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா வழங்கி வேலை பார்க்க அனுமதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்து விடக்கூடாது, அப்படிச்செய்தால் அது பெண்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என வலியுறுத்தி உள்ளனர்.  #H4Visa #H1BVisa
    Next Story
    ×