search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா சபையின் 73 வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வந்தடைந்தார் சுஷ்மா சுவராஜ்
    X

    ஐ.நா சபையின் 73 வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வந்தடைந்தார் சுஷ்மா சுவராஜ்

    அமெரிக்காவில் நடைபெற உள்ள 73-வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகர் வந்தடைந்தார். #SushmaSwaraj #73UNGeneralAssembly
    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இரண்டு வாரம் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று நடப்பு ஆண்டில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து பொதுவிவாதம் நடத்துவார்கள்.

    அதன்படி, இந்த ஆண்டிற்கான ஐ.நா பொதுச்சபையின் 73-வது கூட்டம், செப்டம்பர் 25 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 25 ஆம் தேதி காலை, ஐக்கிய நாடுகள் அரங்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலகத் தலைவர்களிடையே உரையாற்ற உள்ளார்.

    இந்நிலையில், இந்தியா சார்பாக இந்த கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா புறப்பட்ட மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகரம் சென்றடைந்தார்.

    இந்த பொதுக்கூட்டத்தின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகள் மட்டத்திலான அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×