search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்
    X

    ஆண்களுக்கு ஆகாது என பெண்களின் குரல்களை ஒலிபரப்பாத ரேடியோவுக்கு ரூ.2 கோடி அபராதம்

    பெண்கள் பாடிய பாடல்களை ஆண்கள் கேட்கக்கூடாது என்ற பழமைவாத சிந்தனையுடன் பெண்கள் பாடல்களை ஒலிபரப்பாமல் இருந்த யூத ரேடியோவுக்கு சுமார் ரூ.2 கோடி அபராதம் விதித்து இஸ்ரேல் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Isreal #JewRadio
    டெல் அவிவ்:

    யூத நாடான இஸ்ரேலில் கோல் பரமா (Kol Barama) என்ற ரேடியோ இயங்கி வருகிறது. யூத மத பழமைவாத கருத்துக்களை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் இந்த ரேடியோ கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் 2011 வரை பெண்களின் குரலை ஒலிபரப்பவே இல்லை.

    பெண்களின் பாடல்களை ஆண்கள் கேட்க கூடாது என்ற பழமைவாத கருத்தின் அடிப்படையில் ரேடியோ நிறுவனம், பெண்களின் குரல்களை கூட ஒலிபரப்பாமல் இருந்துள்ளது. இதனை அடுத்து, 2011-ம் ஆண்டில் பெண்கள் அமைப்புகள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    பெண்களின் குரல்களை கேட்ட வாடிக்கையாளர்கள் விருப்பப்படவில்லை. அவர்களின் விருப்பத்தின் பேரிலே பெண்களின் குரல்கள் ஒலிபரப்பவில்லை என ரேடியோ நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. எனினும், பின்னர் 2013-ம் ஆண்டில் இருந்து பெண் தொகுப்பாளர்களை பணியில் சேர்த்தது. ஆனாலும், பெண்கள் பாடிய பாடல்களை தற்போது வரை ஒலிபரப்பவில்லை. 

    இந்நிலையில், பெண்கள் அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கோல் பரமா ரேடியோவுக்கு 1 மில்லியன் ஷெகெல்ஸ் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
    Next Story
    ×