search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா உள்ளிட்ட 5 ஆசிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பு - அமெரிக்கா தகவல்
    X

    இந்தியா உள்ளிட்ட 5 ஆசிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிப்பு - அமெரிக்கா தகவல்

    இந்தியா உள்ளிட்ட 5 ஆசிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. #Americainformation #Militants

    நியூயார்க்:

    அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு துறையின் ஒருங்கிணைப்பாளர் நாதன் சேல்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் 2017-ம் ஆண்டில் சர்வதேச நாடுகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.

    சர்வதேச அளவில் 100 நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், பிலிப்பைன்ஸ் ஆகிய 5 ஆசிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

    அங்கு மட்டும் 59 சதவீதம் அளவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 70 சதவீத சாவுகள் ஆப்கானிஸ்தான் ஈராக், நைஜீரியா, சோமாலியா, சிரியா ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன. ஐ.எஸ், அல்கொய்தா அவற்றின் கிளை பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.

     


    வெளிநாடுகளை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடைபெறும் மற்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர். உலக அளவில் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் 23 சதவீதம் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது. அதில் பலியானோரின் எண்ணிக்கை 27 சதவீதம் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து தகவல் பரிமாற்றங்களை அதிகரித்து பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. #Americainformation #Militants

    Next Story
    ×