search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுதி பெண்ணிடம் ஆ ஊட்டிகொண்ட எகிப்து வாலிபர் கைது
    X

    சவுதி பெண்ணிடம் ஆ ஊட்டிகொண்ட எகிப்து வாலிபர் கைது

    சவுதி அரேபியாவில் உள்ள ஒரு உணவகத்தில் சக பெண் பணியாளருடன் அமர்ந்து சாப்பிட்ட எகிப்து நாட்டவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Egyptianatebreakfast #Saudifemalecoworker
    ரியாத்:

    இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாகன ஓட்டும் உரிமை சமீபத்தில் அளிக்கப்பட்டது. இருப்பினும், பொது இடங்களில் பெண்கள் பழகுவதற்கென விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன.

    இந்நிலையில், சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் எகிப்து நாட்டவ சக பெண் பணியாளருடன் அமர்ந்து சாப்பிட்ட காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் பரவியது.

    முகம் மற்றும் உடல் முழுவதும் புர்காவால் மறைக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்ள அந்த பெண்ணுடன் எகிப்து நாட்டவர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது போலவும், அந்தப் பெண் அவருக்கு உணவு ஊட்டி விடுவது போலவும் வெளியான காட்சியை பார்த்த போலீசார் அந்த ஓட்டலுக்கு உடனடியாக சென்று அங்கிருந்த எகிப்து நாட்டவரை கைது  செய்தனர்.


    மேலும், பெண்களை பணியமர்த்துவது தொடர்பான விதிமுறைகளை மீறியதாக அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு தொழிலாளர் துறை சார்பில் சம்மன் அனுப்பிய சம்பவம் அங்கு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Egyptianatebreakfast  #Saudifemalecoworker
    Next Story
    ×