search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈராக்கில் உள்ள ஈரான் ஆயுத கிடங்கு மீது தாக்குதல் நடத்துவோம் - இஸ்ரேல் மிரட்டல்
    X

    ஈராக்கில் உள்ள ஈரான் ஆயுத கிடங்கு மீது தாக்குதல் நடத்துவோம் - இஸ்ரேல் மிரட்டல்

    ஈராக் நாட்டில் உள்ள ஈரான் ராணுவத்துக்கு சொந்தமான ஆயுத கிடங்கின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளது. #iranianweaponry #israelsignals
    ஜெருசலேம்:

    சிரியா விவகாரத்தில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவான  நிலைப்பாட்டை ஈரான் அரசு கடைபிடித்து வருகிறது. சிரியா மற்றும் ஈராக் நாட்டுக்கு இடையிலான  எல்லைப்பகுதியில் ஈரானின் ஆதிக்கம் அண்டை நாடான இஸ்ரேலுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னர் ஈராக்கின் பரம எதிரியாக இருந்த ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தனது மேலாண்மையை நிலைநிறுத்தும் வகையில் தற்போது ஈராக்குடன் நட்பு பாராட்டுவதை இஸ்ரேலும் அதன் நட்புநாடான அமெரிக்காவும் விரும்பவில்லை.

    இந்நிலையில், ஈராக் நாட்டுக்கு சமீபத்தில் ஈரான் சக்திவாய்ந்த ஏவுகணைகளை அனுப்பி வைத்ததாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த தகவலை இருநாடுகளுமே மறுத்தன. இதுதொடர்பான செய்தி வெளியானபோது அமெரிக்க ராணுவ மந்திரி மைக் பாம்ப்பியோ கடந்த சனிக்கிழமை இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டின் ராணுவ மந்திரி அவிக்டார் லைபெர்மேன், ‘சிரியாவில் நடைபெற்றுவரும் சம்பவங்களையும், ஈரானின் அச்சுறுத்தல்களையும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சிரியா எல்லையுடன் எங்களை நாங்கள் சுருக்கிக்கொள்ள மாட்டோம் என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்’ என குறிப்பிட்டார்.

    ஈராக்குக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஈரானின் அச்சுறுத்தல்களை எல்லா நிலைகளிலும் நாங்கள் எதிர்த்து சமாளிப்போம். அச்சுறுத்தல் எங்கிருந்து வந்தாலும் கவலை இல்லை. இஸ்ரேலின் சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். #iranianweaponry #israelsignals
    Next Story
    ×