search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நைஜீரியாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 3 நாள் காத்துக்கிடந்த மக்கள்
    X

    நைஜீரியாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 3 நாள் காத்துக்கிடந்த மக்கள்

    நைஜீரியாவில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்ய 3 நாட்களாக வரிசையில் மக்கள் காத்து கிடந்தனர்.
    மொகாடி:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மக்கள் தொகை 20 கோடி. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு தீவிரவாதம் தலை துக்கியுள்ளது. போகோஹராம் என்ற தீவிரவாத அமைப்பு நைஜீரிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

    இந்த நிலையில் இங்கு அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்யும் பணி நடைபெற்றது.

    அந்த பணி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்ய 3 நாட்களாக வரிசையில் மக்கள் காத்து கிடந்தனர்.

    தேர்தலில் வாக்களிப்பதற்காக மொத்தம் 8 கோடி பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை நைஜிரீயாவின் சுதந்திர தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கும் எற்பாடு மிகவும் மெதுவாக நடந்தது. அதனால் அவநம்பிக்கை ஏற்பட்டது. எனவே 3 நாட்கள் வரிசையில் காத்து கிடந்த மக்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.
    Next Story
    ×