search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நல்ல செய்திகளை இருட்டடிப்பு செய்வதாக கூகுள், பேஸ்புக், டுவிட்டர் மீது டிரம்ப் பாய்ச்சல்
    X

    நல்ல செய்திகளை இருட்டடிப்பு செய்வதாக கூகுள், பேஸ்புக், டுவிட்டர் மீது டிரம்ப் பாய்ச்சல்

    கூகுள், டுவிட்டர் பேஸ்புக் போன்றவை தன்னைப்பற்றிய சாதகமான செய்திகளை இருட்டடிப்பு செய்வதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். #WhiteHouseprobes #TrumpaccusesGoogle
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான பிரபல செய்தி நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் கூகுள் முன்னுரிமை அளிக்கிறது. அரசுக்கு எதிர்மறையான செய்திகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்றவை அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றிய சாதகமான செய்திகளுக்கு தருவதில்லை என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார்.

    நமது மக்களின்மீது ஆதிக்கம் செலுத்த கூகுள், டுவிட்டர், பேஸ்புக் ஆகியவை நினைக்கின்றன. இவர்களின் செயல்பாடு பெரும்பான்மையான மக்களுக்கு நியாயமானதாக இல்லை.  மிகவும் மோசமான பாதை வழியாக செல்ல நினைக்கும் இவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.


    அவரது இந்த குற்றச்சாட்டுக்கு கூகுள் நிறுவனமான ஆல்ஃபபெட் இன்க் மட்டும் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிபரின் செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படுவது உண்மைதானா? என்ற விசாரணையில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக டிரம்ப்பின் நிதித்துறை ஆலோசகர் லேரி குட்லோவ் இன்று தெரிவித்துள்ளார். #WhiteHouseprobes #TrumpaccusesGoogle  
    Next Story
    ×