search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் மறுசீரமைப்பு நடைவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் அழைப்பு
    X

    சிரியாவில் மறுசீரமைப்பு நடைவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் அழைப்பு

    அகதிகள் மீண்டும் தாய்நாடு திரும்பும் வகையில் சிரியாவில் மறுசீரமைப்பு நடைவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய நாடுகள் முன்வர வேண்டும் என ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். #VladimirPutin #AngelaMerkel
    பெர்லின் :

    ஆஸ்திரிய வெளியுறவுத்துறை மந்திரி கரின் க்நீஸ்ல் திருமணம் நேற்று நடைபெற்றது, இதில் பங்கேற்ற ஆஸ்திரியா சென்ற ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் திருமண நிகழ்சிகள் முடிவடைந்த பிறகு ஜெர்மனி பயணம் செய்தார்.

    அங்கு, தலைநகர் பெர்லினில் இருந்து 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மெஸ்பெர்க் கோட்டையில் அந்நாட்டு சான்ஸ்லர் ஏஞ்சலா மெர்க்கெல்லை புதின் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக நீடித்து வரும் இயற்கை எரிவாயு குழாய் பதிப்பது தொடர்பான பிரச்சனை, உக்ரைன் விவகாரம் மற்றும் சிரியா தொடர்பான ஆலோசனைகளில் இருநாட்டு தலைவர்களும் ஈடுபட்டனர்.

    அப்போது, வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள லட்சக்கணக்கான சிரியா அகதிகள் மீண்டும் தாய்நாடு திரும்ப ஏதுவாக மனிதாபிமான அடிப்படையில் அங்கு மறுசீரமைப்பு நடைவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய நாடுகள் முன்வர வேண்டும் என புதின் அழைப்பு விடுத்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு மக்கள் சுமார் 10 லட்சம் பேர் ஜோர்டானிலும், 10 லட்சம் பேர் லெபனான் நாட்டிலும் மற்றும் சுமார் 30 லட்சம் பேர் துருக்கியிலும் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

    ஜெர்மனியும் லட்சக்கணக்கான அகதிகளுக்கு தஞ்சம் அடைய அனுமதித்துள்ளதால் அகதிகள் விவகாரம் ஐரோப்பாவிற்கு ஒரு பெரிய சுமையாக உள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள லட்சக்கணக்கான சிரியா அகதிகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு வழிவகை செய்யும்.

    எனவே, மனிதாபிமான அடிப்படையில் சிரியாவில் மறு சீரமைப்பு செய்ய தேவையான நிதியுதவியை வழங்க ஐரோப்பிய நாடுகள் முன்வர வேண்டும் புதின் அழைப்பு விடுத்தார். #VladimirPutin #AngelaMerkel
    Next Story
    ×