search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனைச் சாவடிகளை தாக்கி தீ வைத்த தலிபான்கள்- 30 வீரர்கள் பலி
    X

    ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனைச் சாவடிகளை தாக்கி தீ வைத்த தலிபான்கள்- 30 வீரர்கள் பலி

    ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி தீ வைத்ததில் 30 வீரர்கள் உயிரிழந்தனர்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள், மேலும் பல நகரங்களை கைப்பற்றும் நோக்கத்தில் சமீபமாலமாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி உள்ளனர். இழந்த பகுதிகளை மீட்க பாதுகாப்பு படையினரும் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

    நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள செனயா என்ற ராணுவ தளத்தின்மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை தலிபான் பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி கைப்பற்றினர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், பக்லான் மாகாணம் பக்லான் இ மர்காசி மாவட்டத்தில் உள்ள இரண்டு போலீஸ் சோதனைச்சாவடிகள் மீது நேற்று நள்ளிரவில் தலிபான்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்த சோதனைச் சாவடிகளுக்கு தீ வைத்துள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீஸ் தரப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதேபோல் தெற்கு ஜாபூல் மகாணத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் 4 போலீசார் கொல்லப்பட்டனர். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் தலிபான்கள் தரப்பில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #AfghanAttack
    Next Story
    ×