search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்
    X

    இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவல்

    இந்தியாவின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி கொட்டகைகள் அமைத்து முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #IndiaBorder #IndianArmy #ChinaArmy
    புதுடெல்லி:

    இந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகள் சந்திக்கும் இடத்தில் டோக்லாம் பகுதி அமைந்துள்ளது. இதற்கு 3 நாடுகளும் உரிமை கோரி வருவதால் பிரச்சினைக்குரிய பகுதியாக இருந்து வருகிறது. சீனா கடந்த ஆண்டு இந்த பகுதியை நோக்கி சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது இந்திய ராணுவம் அதை தடுத்து நிறுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே 2 மாதமாக பதட்டம் நீடித்தது. இந்தியா-சீன தலைவர்கள் சந்தித்து பேசியபின்பு பதட்டம் முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் சீனா மீண்டும் இந்திய எல்லைப்பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சாக் செக்டாரில் சுமார் 300-400 மீட்டர் தொலைவுக்கு ஊடுருவிய சீன ராணுவம், 5 கொட்டகைகளை அமைத்துள்ளது.



    அதன்பின்னர் பிரிகேடியர் அளவிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து 3 கொட்டகைகளை சீன ராணுவம் அகற்றி உள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு கொட்டகைகள் சீன வீரர்கள் இன்னும் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக ராணுவம் தரப்பில் உறுதியான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

    இதேபோல் கடந்த ஜூலை மாதமும் இந்திய பகுதிக்குள்  சீன ராணுவம் ஊடுருவியதாகவும், பின்னர் இந்திய வீரர்கள் தொடர்ந்து கொடி அணிவகுப்பு நடத்தியதையடுத்து சீன வீரர்கள் திரும்பி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் பிரச்சனைக்குரிய 23 இடங்களில் டெம்சாக் பகுதியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #IndiaBorder #IndianArmy #ChinaArmy

    Next Story
    ×