search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புர்கா குறித்து சர்ச்சை கருத்து - போரிஸ் ஜான்சன் மீது சொந்த கட்சி விசாரணை
    X

    புர்கா குறித்து சர்ச்சை கருத்து - போரிஸ் ஜான்சன் மீது சொந்த கட்சி விசாரணை

    முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிரிட்டன் முன்னாள் மந்திரி போரிஸ் ஜான்சன் மீது அவர் சார்ந்த கன்சர்வேடிவ் கட்சி விசாரணையை தொடங்கியுள்ளது. #BorisJohnson #TheresaMay #ConservativeParty
    லண்டன்:

    பிரிட்டன் வெளியுறவு மந்திரியாக பணியாற்றி சமீபத்தில் ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சன், நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில அளித்த பேட்டியில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை அஞ்சல் பெட்டியுடன் ஒப்பிட்டு பேசினார். மேலும், வங்கிக்கொள்ளையர்கள் போலவும், புர்கா அடக்குமுறை சார்ந்தது எனவும் அவர் கூறியிருந்தார்.

    அவரது கூற்று மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் தெரேசா மே இதனை கண்டித்திருந்தார். இந்நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி போரிஸ் ஜான்சன் மீது விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஜான்சன் மீது கடுமையான நடவடிக்கையை தெரேசா மே எடுக்கலாம் என தெரிகிறது.

    பிரெக்ஸிட் விவகாரத்தில் தெரேசா மேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×