search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களத்தில் அல்ல கம்ப்யூட்டரில் கால்பந்து விளையாடி ரூ.1.7 கோடி பரிசு வென்ற இளைஞர்
    X

    களத்தில் அல்ல கம்ப்யூட்டரில் கால்பந்து விளையாடி ரூ.1.7 கோடி பரிசு வென்ற இளைஞர்

    பிபா கால்பந்து இ-உலகக்கோப்பை தொடரில் உலகம் முழுவதும் இருந்து 2 கோடி பேர் கலந்து கொண்ட நிலையில், சவுதியை சேர்ந்த எமெஸ்டாஸ்ட்ரி சாம்பியன் பட்டத்துடன் ரூ.1.7 கோடி பரிசுத்தொகையை தட்டிச்சென்றுள்ளார். #FIFAeWorldCup
    லண்டன்:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. களத்தில் விளையாடுபவர்களுக்கான உலககோப்பை அது என்றால், கம்ப்யூட்டரில் விளையாடுபவர்களுக்காகவும் ஒரு உலககோப்பை நடந்துள்ளது. நீங்கள் கம்ப்யூட்டர் கேம் பிரியர் என்றால் உங்களுக்கு இஏ (EA) என்ற நிறுவனத்தின் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட கேம்கள் தெரிந்திருக்கும்.

    அந்த இஏ நிறுவனம் சமீபத்தில் பிபா கால்பந்து இ-உலகக்கோப்பை தொடரை நடத்தியது. உலகம் முழுவதும் இருந்து இந்த தொடரில் சுமார் 2 கோடி பேர் கலந்து கொண்டனர். பல சுற்றுகளாக நடந்த இந்த தொடரில் நேற்று இறுதிப்போட்டி லண்டனில் நடந்தது.



    பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் சவுதி அரேபியாவை சேர்ந்த எமெஸ்டாஸ்ட்ரி என்பவர் 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்டீபனோ என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும், அவருக்கு 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.7 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

    இஏ நிறுவனம் நடத்திய பல கால்பந்து தொடர்களில் எமெஸ்டாஸ்ட்ரி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×