search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியா மீதான ஐ.நா பொருளாதார தடைகளை ரஷியா மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
    X

    வடகொரியா மீதான ஐ.நா பொருளாதார தடைகளை ரஷியா மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

    வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள பொருளாதார தடைகளை ரஷியா மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
    வாஷிங்டன்:

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்தது. மேலும், ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையிலும் முழுமையான வெற்றி பெற்றதாகவும் அந்நாடு தெரிவித்திருந்தது.

    இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகள் அடங்கிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தாக்கல் செய்து, ரஷியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது. 

    இந்நிலையில், வடகொரியாவை சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு ரஷியாவில் பணி புரிய அந்நாடு அனுமதி வழங்கியதன் மூலம் வடகொரியா மீது ஐ.நா சபை விதித்த பொருளாதார தடைகளை ரஷியா மீறிவிட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து ஐ.நா.விற்கான அமெரிக்காவின் நிரந்திர உறுப்பினர் நிக்கி ஹாலே கூறுகையில், கடந்த செப்டம்பட் மாதம் முதல் ரஷியாவில் பணி புரிவதற்காக வடகொரியாவை சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு புதிய பணி ஆணையை ரஷியா வழங்கியுள்ளது.



    இதன்மூலம் ரஷியாவில் ஆண்டு வருமானமாக கிடைக்கும் 150 முதல் 300 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை தொழிலாளர்கள் வடகொரியாவிற்கு அனுப்பி வைக்கின்றனர். 

    அணு ஆயுத சோதனைகளை கைவிடுவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகளில் ஒன்றான வடகொரியா பணியாளர்களை எந்த நாடும் வேலைக்கு வைத்துக்கொள்ள கூடாது எனும் தடையை ரஷ்யாவின் இந்த செயல் மீறிவிட்டது என ஹாலே குற்றம்சாட்டினார்.

    ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரஷ்யா, வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிப்பதற்கு முன்னதாக கையெழுத்தான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இப்போது பணி வழங்கப்படுகிறது.

    அதன் அடிப்படையில், 3 ஆயிரத்து 500 வடகொரிய தொழிலாலர்களுக்கு பழைய ஒப்பந்தப்படி தற்போது வேலை வழங்கப்படுகிறது. அவர்கள் வரும் 2019-ம் ஆண்டு வரை ரஷ்யாவில் தங்கி பணிபுரிய முடியும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
    Next Story
    ×