search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் முடிவை ஏற்கப் போவதில்லை - நவாஸ் ஷரீப் கட்சி குற்றச்சாட்டு
    X

    பாராளுமன்ற தேர்தல் முடிவை ஏற்கப் போவதில்லை - நவாஸ் ஷரீப் கட்சி குற்றச்சாட்டு

    பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்றத்தின் தேர்தல் முடிவுகளை ஏற்கப் போவதில்லை என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் கட்சி தலைவர் ஷெபாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். #PakistanElection #ShehbazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து நேற்று தேர்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில் ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது.

    தொடக்கத்தில் இருந்தே இம்ரான்கானின் தெஹ்ரீக் இ–இன்சாப் கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வந்தனர். அடுத்த இடத்தில், நவாஸ் ஷரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளது.

    272 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்ற நிலையில், 102 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 43 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் தேர்தல் முடிவுகளை ஏற்கப் போவதில்லை என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் கட்சி தலைவர் ஷெபாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், வாக்குகளை எண்ணும் பணியில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன. அதனால் தான் இம்ரான்கான் கட்சி வெற்றி பெறுவது போன்ற செய்திகள் வெளியிடப்படுகிறது. நாங்கள் இந்த தேர்தல் முடிவை ஏற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். #PakistanElection #ShehbazSharif
    Next Story
    ×