search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - அமெரிக்கா
    X

    பாகிஸ்தான் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் - அமெரிக்கா

    பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேர்தல் ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #PakistanElection
    வாஷிங்டன்:

    பாகிஸ்தானில் பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களுக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சி, தெஹ்ரீக் இ இன்சாப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய 3 முதன்மை கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இதில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

    அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையிலும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 388 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. 

    இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேர்தல் ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாகிஸ்தானில் நடைபெறும் தேர்தல் ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த தேர்தலில் பாகிஸ்தானியர்கள் அனைவரும் அமைதியை கடைப்பிடித்து தங்களின் வாக்குகளை பதிவிட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். #PakistanElection
    Next Story
    ×