search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் ஆளும்கட்சி வேட்பாளருக்கு ஆயுள் தண்டனை - தொகுதியில் தேர்தல் ரத்து
    X

    பாகிஸ்தானில் ஆளும்கட்சி வேட்பாளருக்கு ஆயுள் தண்டனை - தொகுதியில் தேர்தல் ரத்து

    பாகிஸ்தானில் ஆளும் நவாஸ் ஷரிப்பின் கட்சி வேட்பாளர் ஹனிப் அப்பாஸிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் போட்டியிட்ட தொகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #PakistanGeneralPolls #HanifAbbasi
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நவாஸ் ஷரிப்பின் முஸ்லிம் லீக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த மாதம் 25-ம் தேதி பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் சார்பில் என்.ஏ 60 என்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஹனிப் அப்பாஸிக்கு போதை மருத்து தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நவாஸ் ஷரிப்பின் நண்பருமான அப்பாஸி மீது 2012-ம் ஆண்டு போதை மருந்து தடுப்பு பிரிவு போலீசாரால் வழக்கு தொடரப்பட்டது. சுமார் 500 கிலோ வேதிப்பொருளை போதைப்பொருளாக மாற்றி விற்பனை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.



    இதையடுத்து, கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு, அப்பாஸி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இவர் நவாஸ் ஷரிப் அடைக்கப்பட்டுள்ள அதே அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அப்பாஸி போட்டியிட இருந்த என்.ஏ 60 தொகுதியில் வாக்குப்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், பொதுத்தேர்தல் முடிந்த பிறகு அந்த தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் எனவும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #PakistanGeneralPolls #HanifAbbasi
    Next Story
    ×