search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலில் ரஷியா தலையீடு என்ற புலனாய்வு அமைப்புகளின் முடிவு சரியே - டிரம்ப் அந்தர் பல்டி
    X

    தேர்தலில் ரஷியா தலையீடு என்ற புலனாய்வு அமைப்புகளின் முடிவு சரியே - டிரம்ப் அந்தர் பல்டி

    அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையீடு தொடர்பாக நடந்து வரும் விசாரணையை 2 நாட்களுக்கு முன்னர் கடுமையாக விமர்சித்த டிரம்ப், தற்போது புலனாய்வு அமைப்புகளின் முடிவுவை ஏற்றுக்கொள்வதாக பல்டி அடித்துள்ளார். #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் கடந்த திங்கள் அன்று பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி நகரில் சந்தித்து பேசினர். 

    பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய உளவுத்துறையின் தலையீடு தொடர்பாக ராபர்ட் முல்லர் குழு விசாரணை நடத்தி வருவது இரு நாடுகளுக்கும் இடையே மோசமான உறவு உருவானதற்கு முக்கிய காரணம் என்பதை குறிப்பிடும் விதமாக  டிரம்ப் ட்வீட் செய்திருந்தார்.

    அமெரிக்காவின் இத்தனை ஆண்டுகால முட்டாள்தனமும் ரஷியா உடனான பகைக்கு காரணம் என டிரம்ப் ட்வீட்டியிருந்தார். மேலும், புதின் உடன் செய்தியாளர்களை சந்திக்கும் போது, ராபர்ட் முல்லர் விசாரணை பேரிடராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

    சொந்த நாட்டின் மீதே டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. டிரம்ப் கட்சியை சேர்ந்தவர்களே அவரை விமர்சிக்க தொடங்கினர். எதிர்ப்பலைகள் உருவானதை அடுத்து, அவற்றை எதிர்கொள்ளும் விதமாக டிரம்ப் தனது முந்தைய கருத்தில் இருந்து பல்டி அடித்துள்ளார்.

    ‘2016 தேர்தலில் ரஷியா தலையீடு என்ற அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறேன். ரஷியா ஏன் தலையீட்டுக்கான காரணத்தை நான் பார்க்கவில்லை என கூற விரும்பினேன். ஆனால், மாற்றி பேசிவிட்டேன். அமெரிக்க புலனாய்வு அமைப்பின் விசாரணை மீது முழு நம்பிக்கையும், ஒத்துழைப்பையும் அளிப்பேன்’ என டிரம்ப் தற்போது விளக்கமளித்துள்ளார்.
    Next Story
    ×