search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதினின் முன் நனைந்த நூடுல்ஸ் போல நிற்கிறீர்களே - டிரம்ப் மீது அர்னால்ட் பாய்ச்சல்
    X

    புதினின் முன் நனைந்த நூடுல்ஸ் போல நிற்கிறீர்களே - டிரம்ப் மீது அர்னால்ட் பாய்ச்சல்

    ரஷிய அதிபர் புதின் உடனான டிரம்ப் சந்திப்புக்கு பின்னர், சொந்த கட்சியினரே அவரை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், புதின் முன்னால் டிரம்ப் நனைந்த நூடுல்ஸ் போல நிற்பதாக அர்னால்ட் விமர்சித்துள்ளார். #TrumpputinSummit
    நியூயார்க்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் சந்திப்பு பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி நகரில் நேற்று நடந்தது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் பனிப்போர் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய உளவுத்துறையின் தலையீடு தொடர்பாக ராபர்ட் முல்லர் குழு விசாரணை நடத்தி வருவது இரு நாடுகளுக்கும் இடையே மோசமான உறவு உருவானதற்கு முக்கிய காரணம் என்பதை குறிப்பிடும் விதமாக  டிரம்ப் ட்வீட் செய்திருந்தார்.

    ‘ரஷியா உடனான நமது உறவு மிகவும் மோசமான சூழலுக்கு சென்றதற்கு பல ஆண்டுகால அமெரிக்காவின் முட்டாள்தனத்திற்கு நன்றி. தற்போதைய தேடலுக்கும் (ராபர்ட் முல்லர் குழுவின் விசாரணை)  நன்றி’ என அவர் ட்வீட் செய்தார்.

    ரஷிய வெளியுறவு அமைச்சகம் டிரம்ப்பின் ட்விட்டை லைக் செய்ததோடு, சரியான சொன்னீர்கள் என ரீ-ட்வீட் செய்திருந்தது. மேலும், செய்தியாளர்களின் சந்திப்பின் போது, அதிபர் தேர்தல் தலையீடு தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணை தன்னை வெகுவாக பாதிப்பதாக பேசினார். 



    சொந்த நாட்டின் மீது டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சொந்த கட்சியினரே டிரம்ப்பின் பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளனர். புதினுக்கு முன் அமெரிக்காவின் கவுரவத்தை டிரம்ப் இறக்கி வைத்துவிட்டதாக அமெரிக்க எதிர்க்கட்சி குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னருமான அர்னால்ட், டிரம்ப்பை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    “அதிபர் டிரம்ப் அவர்களே, புதினுடன் நீங்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசியதை பார்த்தேன். வளைந்து குலைந்த நூடுல்ஸ் போல புதின் முன்னாள் நீங்கள் நிற்கிறீர்கள். ஒரு ரசிக சிறுவன் தனது அபிமானவரின் அருகில் நிற்பது போல இருந்தது. புதினிடம் ஆட்டோகிராப் அல்லது செல்பி எடுத்துக்கொள்ள அனுமதி கேட்க சென்றவர் போல இருந்தது. தனது கவுரவத்தை மொத்தமாக விற்றுவிட்டீர்கள்” என அந்த வீடியோவில் அர்னால்ட் பேசியுள்ளார்.
    Next Story
    ×