search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை தொடங்கியது
    X

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை தொடங்கியது

    உலக அரங்கில் மிகவும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை ஹெல்சின்கி நகரில் நடைபெற்று வருகிறது. #TrumpPutinSubmmit #HelsinkiSubmmit
    ஹெல்சின்கி:

    அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

    இந்தநிலையில், பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரில் இன்று அதிபர் மாளிகையில் டிரம்ப் - புதின் சந்தித்து பேசி வருகின்றனர்.  இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 


    முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டுபிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பின்னர், டிரம்ப்பும் புதினும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து, கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக, புதின் உடனான பேச்சுவார்த்தை மிக குறைந்த நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டிருந்த டிரம்ப், ஹெல்சின்கி நகரில் இன்று பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னர், ரஷியாவுடன் மிகச்சிறப்பான உறவுகள் இனி ஏற்படும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×