search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுகாதார குறைவு - அபுதாபியில் இந்திய ஓட்டலின்  கிளை மூடப்பட்டது
    X

    சுகாதார குறைவு - அபுதாபியில் இந்திய ஓட்டலின் கிளை மூடப்பட்டது

    சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பல்வேறு அம்சங்களை கடைபிடிக்க தவறியதால் அபுதாபி நகரில் உள்ள அஞ்சப்பர் ஓட்டல் கிளையை அதிகாரிகள் மூடியுள்ளனர். #Indianrestaurant #AbuDhabiIndianrestaurant #Indianrestaurantclosed
    துபாய்:

    சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் அஞ்சப்பர் அசைவ உணவகத்தின் கிளைகள் மிகவும் பிரபலமாக இயங்கி வருகின்றன. இந்த ஓட்டலின் கிளை அபுதாபி நகரில் உள்ள அல் கலிதியா தெருவில் அமைந்துள்ளது.

    சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பல்வேறு அம்சங்களை கடைபிடிக்க தவறியதால் இங்குள்ள அஞ்சப்பர் ஓட்டல் கிளையை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

    அசுத்தமான அழுக்கடைந்த தரைகள், மேல்கூரை, வெளிச்சம் பற்றாக்குறை, அசுத்தமான குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்டவை அந்நாட்டின் சுகாதாரத்துறையின் வழிகாட்டி விதிமுறைகளின்படி இல்லாததால் இந்த குறைகளை உடனடியாக நிவர்த்திக்குமாறு ஓட்டல் நிர்வாகத்தை அதிகாரிகள் வலியுறுத்தி வந்துள்ளனர்.

    மேலும், சமையல் அறையில் பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இருப்பு வைக்கப்பட்டிருந்த உணவுப் பண்டங்களின் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை. ஒழுங்கான பயிற்சி பெறாத பணியாளர்கள் என பல்வேறு குறைகளை கண்டுபிடித்த அதிகாரிகள் இதை சரிப்படுத்துமாறு எச்சரித்தனர்.

    இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இயங்கி வந்ததால் இங்குள்ள அஞ்சப்பர் ஓட்டல் கிளையை அதிகாரிகள் மூடியுள்ளனர் என அந்நாட்டின் பிரபலமான கலிஜ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்வரை இந்த ஓட்டல் மூடப்பட்டு இருக்கும் என அபுதாபி நாட்டின் உணவு கட்டுப்பாட்டுத்துறை செய்தி தொடர்பாளர் தாமெர் அல் காசிமி குறிப்பிட்டுள்ளார். #Indianrestaurant #AbuDhabiIndianrestaurant #Indianrestaurantclosed 
    Next Story
    ×