search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளத்தில் தொடரும் கனமழை - நிலச்சரிவால் 8 பேர் பலி
    X

    நேபாளத்தில் தொடரும் கனமழை - நிலச்சரிவால் 8 பேர் பலி

    நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Nepal
    காத்மாண்டு:

    நேபாள நாட்டின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. 3 நாட்களுக்கும் மேலாக தொடரும் கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

    கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாத்து அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க, 700-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறையினர், ராணுவ அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், நேற்று இரவு பக்தாபூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல், கபிலவஸ்து, ரூபந்தேகி, பக்லங், ஜாபா ஆகிய மாவட்டங்களிலும் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வெள்ளப்பெருக்கு  காரணமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு பாதுகாப்பான இடத்தை நோக்கி புலம்பெயர்ந்துள்ளனர். அவ்வப்போது நேபாளத்தில் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

    இதுதொடர்பாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ஆற்றுப்படுகை ஆக்கிரமிப்பு மற்றும் ஆற்று மணல் கடத்தல் போன்றவற்றால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளனர். #Nepal
    Next Story
    ×