search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து - இலங்கை பெண் மந்திரி மீது அதிபர் நடவடிக்கை
    X

    விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து - இலங்கை பெண் மந்திரி மீது அதிபர் நடவடிக்கை

    விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன் மீது கடும் நடவடிக்க எடுக்க அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன். தமிழரான இவர் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர். குழந்தைகள் நலத்துறையை கவனித்து வரும் விஜயகலா யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அவர், ‘‘இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகம் நடைபெற்ற போது சமூகத்தில் எந்த குற்ற சம்பவமும் நடைபெறவில்லை. இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை’’ என்றார்.


    இந்த பேச்சு இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளியும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. மந்திரி விஜயகலாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    இதுகுறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா கருத்து கூறியுள்ளார். அதில், ‘‘ராஜாங்க மந்திரி பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது என்றார். மேலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். #SrilankanPresident #MaithripalaSirisena #SrilankanMinister
    Next Story
    ×