search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகளின் ஆபாசப்படம் பார்த்த வாட்டிகன் தூதருக்கு 5 ஆண்டு சிறை
    X

    குழந்தைகளின் ஆபாசப்படம் பார்த்த வாட்டிகன் தூதருக்கு 5 ஆண்டு சிறை

    வாட்டிகன் அரண்மனையை சேர்ந்த முன்னாள் அமெரிக்க தூதருக்கு குழந்தைகள் பாலியல் படம் பார்த்த வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிப்பட்டுள்ளது. #Vaticanexdiplomatsentenced #MonsignorCarloAlbertoCapella #childpornographycharges
    வாட்டிகன் சிட்டி:

    உலகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவாக போற்றப்படும் போப் வாழும் வாட்டிகன் நகர அரண்மனையின் சார்பில் உலக நாடுகளில் தூதரகங்கள் இயங்கி வருகின்றன.

    இவ்வகையில், அமெரிக்கா தலைநகரம் வாஷிங்டன் நகரில் உள்ள வாட்டிகன் தூதரகத்தின் தலைமை தூதராக பணியாற்றிய மோன்சைனோர் கார்லோ ஆல்பெர்டோ கபெல்லா மீது கடந்த ஆண்டு பாலியல் ரீதியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    தடை செய்யப்பட்ட குழந்தைகள் பாலியல் படங்களை அவர் பார்த்து ரசித்து வந்ததாகவும் தெரியவந்து. இதைதொடர்ந்து தூதர் பணியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு வாட்டிகனுக்கு திருப்பி அழைக்கப்பட்டார். அவர்மீது வாட்டிகன் அரண்மனையில் உள்ள தனி விசாரணை நடைபெற்று வந்தது.

    மன அழுத்தத்தின் காரணமாக இதைப்போன்ற படங்களை பார்ப்பதை பழகிகொண்டதாக வாக்குமூலம் அளித்த மோன்சைனோர் கார்லோ ஆல்பெர்டோ கபெல்லா தனது குற்றத்தை ஒப்புகொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் யூரோ அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    இத்தாலி நாட்டை சேர்ந்த மோன்சைனோர் கார்லோ ஆல்பெர்டோ கபெல்லா தனது தண்டனையை வாட்டிகன் அரண்மனை வளாகத்தில் உள்ள சிறிய சிறைச்சாலையில் அனுபவிக்க நேரிடும் என தெரியவந்துள்ள நிலையில், மேலும் இதுபோல் சுமார் 30 அதிகாரிகள் வாட்டிகன் நீதிமன்றத்தில் பாலியல் ரீதியான வழக்குகளை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Vaticanexdiplomatsentenced #MonsignorCarloAlbertoCapella #childpornographycharges
    Next Story
    ×