search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் பிரசாரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது கோழைத்தனமான செயல் - ஜிம்பாப்வே அதிபர்
    X

    தேர்தல் பிரசாரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது கோழைத்தனமான செயல் - ஜிம்பாப்வே அதிபர்

    தேர்தல் பிரசார கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியத் கோழைத்தனமான செயல் என ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் ம்நான்காவா தெரிவித்துள்ளார். #Zimbabwepresidenrally
    ஹராரே:

    ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. பிரதான வேட்பாளர்களிடையே பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் எம்மர்சன் ம்நான்காவா பேசினார். அவரது பேச்சை கேட்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். 

    பேச்சை முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கியபோது எம்மர்சன் ம்நான்காவாவை நோக்கி ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு அதிபரின் மீது படாத வகையில் பாதுகாவலர்கள் அவரை ஒருபக்கமாக இழுத்து தள்ளி, எம்மர்சன் ம்நான்காவாவின் உயிரை காப்பாற்றினர். இந்த தாக்குதலில் துணை அதிபர்களில் ஒருவரும், மற்ற கட்சியினர் சிலரும் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில், தேர்தல் பிரசார கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியத் கோழைத்தனமான செயல் என ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் ம்நான்காவா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் கூறுகையில், தேர்தல் பிரசார கூட்டம் மிகவும் அமைதியான முறையில் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இன்றி நடைபெற்றது. தேர்தல் பிரசார கூட்டத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்துவது மிகவும் கோழைத்தனமான செயல். இதுபோன்ற செயலை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பதிவிட்டுள்ளார். #Zimbabwepresidenrally  #EmmersonMnangagwa  #Mnangagwanothurt
    Next Story
    ×