search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் கிஷன்கங்கா புனல் மின் நிலையத்துக்கு எதிராக உலக வங்கியிடம் பாகிஸ்தான் பஞ்சாயத்து
    X

    காஷ்மீரில் கிஷன்கங்கா புனல் மின் நிலையத்துக்கு எதிராக உலக வங்கியிடம் பாகிஸ்தான் பஞ்சாயத்து

    காஷ்மீர் மாநிலத்தில் நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த கிஷன்கங்கா புனல் மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிராக உலக வங்கியிடம் பாகிஸ்தான் அரசு முறையீடு செய்கிறது. #Kishanganga #Induswaterstreaty #WorldBank
    வாஷிங்டன்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆண்டுக்கு சுமார் 171 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கிஷன் கங்கா புனல் மின்சார நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

    கிஷன் கங்கா ஆற்று நீரை பாதாள கால்வாய் மூலம் சுமார் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு கொண்டு சென்று மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த திட்டத்துக்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கியது.

    இந்த திட்டப் பணிகள் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிந்து நீர் ஒப்பந்தத்துக்கு முரணாகவும், எதிராகவும் அமைந்துள்ளதாக கடந்த 17-5-2010 அன்று சர்வதேச முறையீட்டு நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு வழக்கு தொடர்ந்தது.



    இதே பகுதியில் 969 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட நீலம்-ஜீலம் புனல் உற்பத்தி நிலையம் ஒன்றை பாகிஸ்தான் அமைத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின்  கிஷன் கங்கா புனல் மின்சார நிலையத்துக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்த வழக்கில் இந்த திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என தி ஹாக் நகரில் உள்ள சர்வதேச முறையீட்டு நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டில் தீர்ப்பளித்து இருந்தது.

    இதைதொடர்ந்து பணிகள் நிறைவடைந்து ஆண்டுக்கு சுமார் 171 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கிஷன் கங்கா புனல் மின்சார நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்த நிலையில், கிஷன்கங்கா புனல் மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிராக உலக வங்கியிடம் முறையீடு செய்ய பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.

    கிஷன்கங்கா ஆற்றுப் பகுதியில் அணை கட்டுவது தொடர்பாகவும் உலக வங்கி தலைவரை சந்தித்து பேசுவதற்காக பாகிஸ்தான் அரசின் தலைமை வழக்கறிஞர் அஷ்டர் அவுசப் அலி தலைமையில் நான்கு உயரதிகாரிகளை கொண்ட குழுவினர் வாஷிங்டன் நகருக்கு வந்துள்ளதாக அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தலைமை தூதர் ஐஜாஸ் அகமது சவுத்ரி இன்று தெரிவித்துள்ளார். #Kishanganga #Induswaterstreaty #WorldBank
    Next Story
    ×