search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணு குண்டு பரிசோதனை மையத்தை நிர்மூலமாக்க வடகொரியா முடிவு
    X

    அணு குண்டு பரிசோதனை மையத்தை நிர்மூலமாக்க வடகொரியா முடிவு

    அமெரிக்க அதிபருடனான சந்திப்புக்கு முன்னதாக இந்த மாதம் கடைசி வாரத்துக்குள் தங்கள் நாட்டில் உள்ள அணு குண்டு பரிசோதனை மையத்தை நிர்மூலமாக்க வடகொரியா தீர்மானித்துள்ளது. #kimjongun #trump
    பியாங்யாங்:

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். அதற்கு முன்னதாக வடகொரியா தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்டுள்ள ரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்துள்ளதாக அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

    பருவநிலை மற்றும் காற்றின் போக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வரும் 23 அல்லது 25-ம் தேதிகளில் இந்த மூடுவிழா நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், அப்பகுதியில் உள்ள அணு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையங்கள், சோதனை மற்றும் பாதுகாப்பு சாவடிகளும் அகற்றப்படும் என தெரியவந்துள்ளது. #kimjongun #trump
    Next Story
    ×