search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம்- இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
    X

    நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம்- இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

    நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம் ஒன்றை இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    லண்டன்:

    பூமி பந்துக்கு மேலே ஏராளமான கிரகங்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கிரகங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த கிரகத்தை அமெரிக்காவின் ஹெப்ளர் தொலைநோக்கி மூலம் அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த கிரகம் பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டு தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதற்கு ‘வாஸ்ப்-104 பி’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.

    புதிய கிரகம் மிகவும் அடர்ந்த கருப்பாக உள்ளது. அதாவது நிலக்கரியை விட கருப்பாக இருக்கிறது.

    பொதுவாக கிரகங்கள் பக்கத்தில் உள்ள நட்சத்திரங்களின் ஒளியை உமிழும் தன்மை கொண்டவை. இதன் காரணமாக அந்த கிரகங்கள் ஓரளவு வெளிச்சம் கொண்டதாக இருக்கும்.

    ஆனால், இந்த கிரகத்துக்கு உமிழும் தன்மை மிகவும் குறைவாக உள்ளது. நட்சத்திரங்களில் இருந்து கிடைக்கும் ஒளியில் 99 சதவீதத்தை உள்வாங்கிக்கொண்டு ஒரு சதவீதத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது.

    இதனால் தான் அந்த கிரகம் இவ்வளவு கருப்பாக உள்ளது. நமது பூமிக்கு அருகில் இருக்கும் வெள்ளி கிரகம் 70 சதவீத ஒளியை உமிழ்கிறது.

    வியாழன் போன்ற கிரகங்களில் வாயுக்கள் அதிகம் உள்ளன. இதனால் ஒளியை ஈர்ப்பது அதிகமாக உள்ளது. இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள கிரகமும் வியாழனை போன்ற அதிக வாயுக்கள் கொண்ட கிரகமாக இருக்கலாம், இதனால்தான் அதிக ஒளியை ஈர்த்து கொள்கிறது என்று விஞ்ஞானிகள் கூறினார்கள்.

    இந்த கிரகம் தனது வட்ட பாதையில் சுற்றுவதற்கு 1.76 நாட்கள் எடுத்துக்கொள் கிறது. #tamilnews
    Next Story
    ×