search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துருக்கி பாராளுமன்றத்துக்கு ஜூன் 24-ம் தேதி தேர்தல்
    X

    துருக்கி பாராளுமன்றத்துக்கு ஜூன் 24-ம் தேதி தேர்தல்

    துருக்கி நாட்டு பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவின்படி வாக்குப்பதிவை வரும் ஜூன் மாதம் 24-ம் தேதி நடத்த இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    அன்காரா:

    துருக்கி நாட்டு பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவின்படி வாக்குப்பதிவை வரும் ஜூன் மாதம் 24-ம் தேதி நடத்த இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    550 இடங்களை கொண்ட துருக்கி நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த 1-11-2015 அன்று தேர்தல் நடைபெற்றது. அந்நாட்டின் பிரதமாராக பினாலி இல்டிரிம் பதவி வகித்துவரும் நிலையில் நான்காண்டுகள் வரையிலான பாராளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் 1-11-2019 அன்று முடிவதற்கு முன்னதாக பொது தேர்தலை நடத்த வேண்டும் என அந்நாட்டின் அதிபர் தாயிப் எர்டோகன் வலியுறுத்தி வந்தார்.

    இதைதொடர்ந்து, முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அதிபரின் முடிவு தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை எதிர்த்து எதிர்க்கட்சியான குர்திஸ்தான் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர், ஏகோபித்த ஆதரவுடன் துருக்கி பாராளுமன்றத்துக்கு ஜூன் 24-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. #tamilnews
    Next Story
    ×