search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ
    X

    9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ

    சிங்கப்பூரில் நயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. அது 8 நிமிடம் 55 வினாடிகளில் மர நாற்காலியை தயாரித்து முடிக்கிறது.
    சிங்கப்பூர்:

    ‘ரோபோ’க்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள் போன்றவற்றில் பணிபுரியும் ‘ரோபோ’க்கள் தற்போது பொருட்கள் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளன.

    சிங்கப்பூரில் நயாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் நாற்காலி தயாரிக்கும் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. அது 8 நிமிடம் 55 வினாடிகளில் மர நாற்காலியை தயாரித்து முடித்தது.


    அளவாக வெட்டி தயாராக வைக்கப்பட்டிருந்த மரச்சட்டங்களை எடுத்து ஸ்குரூ ஆணிகள் மூலம் அவற்றை நேர்த்தியாக பொருத்துகிறது.

    அதற்காக ‘ரோபோ’வுக்கு 2 கைகளும் சமமாக அளவில் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் எந்திர விரல்கள் மிக அழகாக நாற்காலி தயாரிக்கும் வேலையை செய்கின்றன. பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பாம் குயாங் குவாங் தலைமையிலான குழுவினர் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளனர்.    #Robotics #Robot #IKEA #Singapore
    Next Story
    ×