search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு வருகிறது அதிரடி கட்டுப்பாடுகள்
    X

    அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு வருகிறது அதிரடி கட்டுப்பாடுகள்

    40 கி.மீ தொலைவுக்கு மேல் பயணம் செய்ய முன் அனுமதி பெற வேண்டும் என அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் தற்போது சுமூகமான உறவு இல்லை. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக கூறி அந்நாட்டுக்கு வழங்க இருந்த நிதியை டிரம்ப் நிறுத்தி வைத்தார். சில வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் கராச்சியில் உள்ள பழங்குடிகள் பகுதிக்கு செல்லக்கூடாது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.

    இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது. தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 40 கி.மீ தொலைவுக்கு மேல் பயணம் செய்ய வேண்டுமானால் முன் அனுமதி பெற வேண்டும் என புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அதுவும், பயண தேதியில் இருந்து 5 தினங்களுக்கு முன்னர் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் இந்த கட்டுபாடுகள் அமலுக்கும் வர உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் புகாரளிக்க இருப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #TamilNews
    Next Story
    ×