search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இணைய தளங்களில் குழந்தை ஆபாச படங்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு- ஆய்வில் அதிர்ச்சி தகவல்
    X

    இணைய தளங்களில் குழந்தை ஆபாச படங்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    கடந்த ஆண்டில் மட்டும் இணையங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக இணைய வாட்ச் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #internetwatchfoundation
    லண்டன்:

    இணைய வாட்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பானது (ஐ.டபுள்யு.எஃப்.) இணையதளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அவை குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றை நீக்கும் அதிகாரம் கொண்டவை.

    இந்நிலையில், ஐ.டபுள்யு.எஃப். அமைப்பு வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இணையதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளது. சென்ற ஆண்டு 78 ஆயிரம் குழந்தை ஆபாச வீடியோக்களின் யு.ஆர்.எல். இருந்தது. அது தற்சமயம் 37 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும், கற்பழிப்பு மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்துதல் போன்ற வீடியோக்கள் 33 சதவீதமாக் அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து ஐ.டபுள்யு.எஃப். சி.இ.ஒ. கூறுகையில், ‘குற்றவாளிகள் மிகவும் புத்திசாலிகளாக மாறி வருகின்றனர். அவர்கள் ஆபாச படங்களை பதிவு செய்வதற்கு புதிய வழிகளை கண்டுபிடிக்கின்றனர். அவை தொடர்ச்சியாக பகிரப்படுகின்றன. ஆனால் அவர்கள் மாட்டிக்கொள்ளாதபடி வீடியோக்களை பதிவு செய்கின்றனர். அவற்றை நீக்கும் பணியில் எங்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளது. இருப்பினும் சில இணையதளங்களை நீக்குவது கடினமாக உள்ளது. இதில் ஐரோப்பியா முதல் இடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ரஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன’ என்றார். #internetwatchfoundation

    Next Story
    ×