search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியா மீது தாக்குதல் - ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது
    X

    சிரியா மீது தாக்குதல் - ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

    சிரியா மீது அமெரிக்கா இன்று நடத்திய ஏவுகணை தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ரஷியாவின் அழைப்பின் பேரில் ஐ.நா. பாதுகாப்பு சபை இன்னும் சற்று நேரத்தில் அவசரமாக கூடுகிறது. #UNSecurityCouncil #Syriastrikes
    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்றது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.

    சர்வதேச ரசாயன ஆயுத தடுப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் டவுமா நகருக்கு நேரில் சென்று இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்னும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷியா முன்வைத்தது.

    ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் 9 நாடுகள் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால்தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்னும் நிலையில் ரஷியாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஏழு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் ரஷியா இயற்றிய இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.

    அமெரிக்காவும் ரஷியாவும் பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் போட்டிப்போட்டு கொண்டு இருக்காமல் சிரியா விவகாரத்தில் செய்ய வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக முடிவெடுப்பதற்காக பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து பொதுகருத்தை உருவாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தி இருந்தார்.

    இதற்கிடையே, சிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் இன்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின. 

    இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து, (இந்திய நேரப்படி) இன்றிரவு 8.30 மணியளவில் அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் உரையாற்றவுள்ளதாக ஐ.நா. தலைமயகம் தெரிவித்துள்ளது. #tamilnews  #UNSecurityCouncil #Syriastrikes
    Next Story
    ×